இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் குவித்தது. இந்நிலையில், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய சிம்பு தேவனே இரண்டாவது பாகத்தையும் இயக்கவிருக்கிறார். வடிவேலு நடிக்கிறார். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த பாகத்திற்கு `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாகத்தை இயக்குநர் ஷங்கரும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,
``ராஜாதி ராஜ... ராஜ மார்த்தாண்ட... ராஜ கம்பீர... ராஜ குலுதிலக... ராஜ பராக்கிரம... ராஜ குலோத்துங்க... ராஜ வைராக்கிய... மாமன்னர்
பராக் பராக் பராக்.....
நாளை முதல் ராஜ பார்வை"