சினிமா

ரூ.300 கோடியை நெருங்கும் பத்மாவத்

பத்மாவத் இதுவரை ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் ரூ.300 கோடியை தொடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பஸ்களை எரித்து வன்முறைகளில் ஈடுபட்டனர். தீபிகா படுகோனே, படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. வழக்குகளும் தொடரப்பட்டது. தணிக்கை குழுவினரும் அனுமதி அளிக்க மறுத்தனர்.

அதன்பிறகு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவால் பத்மாவத் படம் திரைக்கு வந்தது. ஆனாலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், அரியானா மாநிலங்களில் பல இடங்களில் படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் எதிர்ப்பை மீறி பத்மாவத் படம் இந்தியா முழுவதும் வசூலில் சாதனை நிகழ்த்தி உள்ளது.

இந்த படம் ரூ.180 கோடி செலவில் எடுக்கப்பட்டு இருந்தது. படம் இதுவரை ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வசூல் ரூ.300 கோடியை தொடும் என்றும் இந்தி பட வினியோகஸ்தர் ஒருவர் கூறினார். டிஜிட்டல், டெலிவிஷன் உரிமைகள் மூலமும் ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருக்கிறது.