த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார்.
காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.