பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா பிசி நடிகையாகி இருக்கிறார். தற்போது ராகவா லாரன்சின் ‘காஞ்சனா-3’, ‘களவாணி-2’ படங்களில் நடித்து வருகிறார். இப்போது, ‘90 எம்.எல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
அனிதா உதீப் இயக்கும் இந்த படத்துக்கு சிம்பு இசை அமைக்கிறார். காமெடி படமாக உருவாகும் இதன் முதல் போஸ்டர் காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடத்தில் ஓவியா நடிக்கிறார். அவருக்கு ஓரின சேர்க்கையாளர் வேடம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே, நித்யாமேனன் ‘அவே’ படத்தில் லெஸ்பியனாக நடித்து இருக்கிறார். ஓவியாவும் கதைக்கு தேவை என்றால் இந்த வேடத்தில் நடிப்பதில் தவறு இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஓவியாவுக்கு இந்த படத்தில் என்ன பாத்திரம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உண்மையாகவே, ஓவியாவுக்கு இந்த படத்தில் அதுபோன்ற வேடம் என்றாலும், அதை முதலிலேயே சொல்லுவார்களா? என்பது சந்தேகம் தான். எது எப்படியோ இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.