OTT

இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை

தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது.20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

மாலை மலர்

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

தடயம்

நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது. இந்த நிலையில், 'தடயம்' தொடரை நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.

ஹனி (Honey)

தெலுங்குப்படமான 'ஹனி' (Honey) தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிறது. சைக்கலாஜிக்கல் திரில்லிங்கான இப்படத்தில் நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

HouseMaid

ஃப்ரீடா மெக்ஃபேடனின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்ட திரில்லரான படம் 'தி ஹவுஸ்மெய்ட்'. பால் ஃபீக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகைகளான சிட்னி ஸ்வீனி மற்றும் அமண்டா செஃப்ரிட் ஆகியோர் நடித்துள்ளார். ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேரும் இளம்பெண் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கண்டு மகிழலாம்.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.