OTT

இந்த வாரம் OTT- யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

ப்ளாஸ்ட் (Blast):

அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பி உருவான திரைப்படம், 'ப்ளாஸ்ட்', சுபாஷ் கே.ராஜ் என்ற புதுமுகம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கராத்தே என்னும் தற்காப்பு கலை ஆசிரியரான கதையின் நாயகன் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர்களின் வாழ்க்கையில் கார்ப்பரேட் முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அப் போது அந்த குடும்பத்தினர் அவர்களை எதிர்த்து எத்தகைய போராட்டத்தை செய்கிறார்கள் என்பதை கதைக்களம் பேசுகிறது. கடந்த மே மாதம் வெளியான இந்தப் படத்தை, நாளை முதல் நெட்பிளிக்ஸ் ஒ.டிடி தளத்தில் பார்க்கலாம்.

லிங்கம் (Lingam)

லக்ஷ்மி சரவணகுமார் இயக்கத்தில் கதிர், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘லிங்கம்’. நாளை மறுநாள் முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் இந்த தொடரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு மகிழலாம்.

மம்மட்டியான் ஸ்டார்ஸ் (Mammattiyaan Stars)

தங்கள் ஆதர்ச நாயகனின் கடைசி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெற முயலும் 3 நண்பர்களை சுற்றி நடைபெறும் சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ள வெப் தொடர் 'Mammattiyaan Stars'. வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட சுப்ரமணியன், நான் கடவுள் ராஜேந்திரன், விவேகன் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் தொடர் நாளை மறுநாள் முதல் ஜீ5 தளத்தில் ஒளிப்பரப்பாக உள்ளது.

லிட்டில் பிரதர் (Little Brother)

அமைதியாக வாழ்ந்து வரும் ஒரு அண்ணனின் வாழ்க்கையில், குறும்புக்கார மற்றும் எப்போதும் ரகளை செய்யும் தம்பியின் வருகைக்கு பின் எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதை நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘லிட்டில் பிரதர்’. இப்படம் நாளை மறுநாள் முதல் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.