ஓடிடி தளங்கள் 
OTT

இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

டிரான் டுகெதர்

டிரான் டுகெதர் என்பது மெர்சிடிஸ் ரான் எழுதிய ‘என்ஃப்ரெண்டாடோஸ்’ என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். எஸ்டர் எக்ஸ்போசிட்டோ மற்றும் ஹ்யூகோ டியாகோ கார்சியா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் நாளை முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

நடிகர் சூர்யாவுக்கு ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஆக.14ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வெளியான 25 நாட்களில் உலகளவில் ரூ.260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்த நிலையில், வருகிற 11-ந்தேதி ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் பிரபல ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிலிக்ஸ் தளத்தில் கண்டு மகிழலாம்.

மகுடம்

நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் ‘மகுடம்’. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் தயாரித்துள்ளது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்து உள்ளார். மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படம் கடந்த மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. ப்ரைம் வீடியோ தளத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற 11-ந்தேதி முதல் காணலாம்.

பிரின்ஸ் ஆஃப் மோலிவுட்

டெய்ன் டேவிஸ் நடிப்பில் உருவாகும் 'பிரின்ஸ் ஆஃப் மோலிவுட்' என்ற மலையாள நகைச்சுவை தொடர் வருகிற 11-ந்தேதி அன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

SCROLL FOR NEXT