ஓடிடி தளங்கள் 
OTT

DC முதல் ஜகமே சங்கீதம் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

தி ஜென்டில்மேன் சீசன் 2

தி ஜென்டில்மேன் சீசன் 2 தொடர் நாளை மறுநாள் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. 8 எபிசோடுகளை கொண்ட இந்த சீசனை ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

GDN

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற ‘ஜி.டி.என்’ படம் செப்டம்பர் 4-ந்தேதி நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

தி கோர்ட்

ஹார்ட் பீட் சீரிஸ் மூலம் பிரபலமான நடிகை யோகலட்சுமி தற்போது ‘தி கோர்ட்’ என்ற சீரிஸ் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார். இந்த சீரிஸில் ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திக்குவாய் குறைபாடுள்ள திறமையான வழக்கறிஞனரான யோகலட்சுமி, நீதிக்காகப் போராடுவதை இத்தொடரின் கதை. இந்த தொடர் வருகிற 4-ந்தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

டிசி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘டிசி’. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாக ரசிகர்களின் கவனத்தை பெற்ற இப்படம் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பிரபல ஓ.டி.டி. தளமான சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கண்டு களிக்கலாம்.

ஜகமே சங்கீதம்

'ஜகமே சங்கீதம்' (Jagame Sangeetham) என்பது Amazon Prime Video ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ஒரு புதிய இசை நாடக வெப் சீரிஸ் ஆகும். பல்நட்டி சூர்யா பிரதாப் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், மதுபாலா, ஸ்ரீகாந்த் மேகா, அக்ஷய் லகுசானி, சுஷ்மிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.