OTT

நானி நடித்த ஹிட் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மாலை மலர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தொடர்ந்து நானி, 'ஹிட் தி தேர்ட் கேஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். திரைப்படம் இதுவரை உலகளவில் 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.