OTT

நாளை OTT-யில் வெளியாகும் Drones

‘டிரோன்ஸ்’ படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

‘டிரோன்ஸ்’ படம் நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், திராவிட் செல்வம், தேவதர்ஷினி, குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டிரோன்ஸ்’. ஹரி எஸ்.ஆர். இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜி.எம். மோர்கன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஃபேண்டஸி, திகில், மர்மம் மற்றும் நகைச்சுவை அம்சங்களை நிறைந்து உருவான ‘டிரோன்ஸ்’ படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

ஓடிடி வெளியீடு

இதனை தொடர்ந்து, ‘டிரோன்ஸ்’ படம் நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் காணலாம். இதன் மூலம் திரையரங்குகளில் படத்தை பார்க்கத் தவறிய ரசிகர்கள் இனி வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் இப்படத்தை கண்டு ரசிக்கலாம்.

SCROLL FOR NEXT