டிசி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி. 
OTT

'DC' படத்தின் ஓடிடி ரிலீசுக்கு தேதி குறிச்சாச்சு!

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உண்டானது.

‘டிசி’ படம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பிரபல ஓ.டி.டி. தளமான சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கண்டு களிக்கலாம்.

டிசி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘டிசி’. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ள 'டிசி' திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வமிதா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கதை

தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’.

கேங்ஸ்டரான லோகேஷ் கனகராஜ் தனது கூட்டாளிகளுடன் போலீசாரின் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடிக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியைக் கொடூரமாக கொலையும் செய்கிறார். இதையடுத்து ஓட்டலில் பதுங்கியிருக்கும் லோகேஷ் கனகராஜை போலீசார் கைது செய்வதுடன், அவருடன் நட்பு பாராட்டிய பாடகி சஞ்சனாவை சுட்டு வீழ்த்துகிறார்கள்.

போலீசாரின் பிடியிலிருந்து தப்பும் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத ஒரு சந்திப்பில் விபசார தொழிலில் ஈடுபட்டு வரும் வாமிகா கபியைச் சந்திக்கிறார். பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்து வரும் வாமிகா கபி. ஒரு கட்டத்தில் லோகேஷ் கனகராஜுடன் பயணிக்கிறார்.

உயிருக்கு பயந்து ஓடும் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி சந்திக்கும் போராட்டங்கள் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

ஆக.7-ல்

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உண்டானது. இதனை தொடர்ந்து இம்மாதம் 7-ந்தேதி வெளியான ‘டிசி’ படம் ரசிகர்களின் கவனத்தை பெற்று வசூலையும் குவித்தது.

ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், ‘டிசி’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ‘டிசி’ படம் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி பிரபல ஓ.டி.டி. தளமான சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கண்டு களிக்கலாம்.