சினிமா

சூர்யா படத்தில் இணைந்த சமீபத்திய ஆஸ்கார் பிரபலம்

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யாவின் 38-வது படமாக உருவாகவிருக்கும் படத்தில் சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற பிரபலம் குனீத் மோங்கா இணைந்துள்ளார். #Suriya38

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள `என்ஜிகே' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு `இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் குனீத் மோங்கா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் சமீபத்தில் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Suriya38 #SudhaKongara #GuneetMonga