சினிமா

படம் ரிலீசுக்கு நல்ல நாள் பார்த்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #HBDVijaySethupathi

விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. ஆறுமுக குமார் இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை சென்சார் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி 2ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும், எட்டு வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT