தமிழ்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி மும்பையைச் சேர்ந்த பட அதிபர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். அவருக்கு ஜான்வி, குஷி என்ற 2 மகள் உள்ளனர்.
இதில் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற இந்திப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஷஷாங்க் கைதன் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் தம்பியும், பியாண்ட் தி கிளெட்ஸ் படத்தில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இஷான் கட்டார் ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்காக ‘தடக்’ படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் கரன் ஜோஹர் தயாரித்துள்ளார்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கிவிட்டதாகவும், படம் வருகிற ஜூலை 20-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #Dhadak #JhanviKapoor #IshaanKhattar