சினிமா

படம் ‘ஹிட்’ ஆவதற்கு காரணம் யாருக்கும் தெரியாது -சுசிகணேசன்

ஒரு படம் ஹிட்டாவதற்கு காரணம் யாருக்கும் தெரியாது என்று திருட்டு பயலே 2 படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார்.

சுசி கணேசன் இயக்கத்தில் பாபிசிம்ஹா, அமலாபால், பிரசன்னா நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‘திருட்டுப்பயலே-2’.

“எல்லோருமே பொய் சொல்லுவார்கள். நம்மில் யாரும் சுத்தம் இல்லை. நல்லவர்கள் பற்றி எழுதி படம் எடுத்தால் வேகம் இருக்காது. எனவே தான், ‘திருட்டுப் பயலே’ தலைப்பை அப்படியே வைத்துக் கொண்டேன்.

‘திருட்டுப் பயலே’ என்ற வார்த்தை கதாநாயகனை மட்டும் குறிக்கவில்லை. இந்த படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இந்த பெயர் பொருந்தும். வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது எளிதல்ல. முதல் படம் போல் 2-வது பாகத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். முதல் படம் ‘ஹிட்’ ஆனது ஏன் என்று இயக்குனருக்கு தெரியும் என நினைக்கிறார்கள். ஒரு படம் ஏன் ஹிட் ஆகிறது? ஏன் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

அனைவரும் ரசிக்கும் படமாக இதை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.