சினிமா

நிவின் பாலியின் `ரிச்சி' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி ப்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `ரிச்சி' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி இருக்கும் இந்த படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். படகுகளை சரி செய்யும் மெக்கானிக் வேடத்தில் நட்டி நடித்துள்ளார்.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்தள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் வருகிற 8-ஆம் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் `ரிச்சி' படத்தின் விநியோக உரிமையை, 'விக்ரம் வேதா', 'அவள்', 'அறம்' படங்களை வெளியிட்ட `டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. படம் குறித்து `டிரைடண்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் பேசுகையில்,

"தரமான படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது நிதர்சனமான உண்மை.  நான் வெளியிட்ட முந்தைய படங்களை போலவே ரிச்சி படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும், படத்தின் வெற்றியை நிச்சயமாக்குகிறது. டிசம்பர் 8-ஆம் தேதி 'ரிச்சி' வெளியாகும். நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும்" என்றார்.