இப்படத்திற்கு `காயம்குளம் கொச்சுண்ணி' என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் நிவின்பாலி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாய் உருவாக உள்ள இப்படத்தை 'ஸ்ரீ கோகுலம் மூவீஸ்' சார்பில் திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் 'பழசிராஜா' என்ற பிரம்மாண்ட படத்தையும், கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தையும் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையில் எழுத்தாளர்கள் பாபி மற்றும் சஞ்சய் பணியாற்றியுள்ளனர்.
கேரள மக்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு பிரபலமாக வாழ்ந்த காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு கேரளாவையும் தாண்டி அனைத்து மொழி மக்களாலும் நிச்சயம் ரசிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறுயிருக்கிறது.