சினிமா

பார்த்திபனுடன் நடிக்க பயந்தேன்: நிவேதா பெத்துராஜ்

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ நிவேதா பெத்துராஜ்க்கு அப்பாவாக நடித்த பார்த்திபனுடன் நடிக்க தான் பயந்ததாக அவரே கூறியிருக்கிறார்.

“இந்த படத்தில் பார்த்திபன் எனது அப்பாவாக நடிக்கிறார் என்றதும் சந்தோ‌ஷமாக இருந்தது. அதே நேரத்தில் அவர் பெரிய நடிகர். அவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பயமும் எனக்கு ஏற்பட்டது.

கிளைமாக்ஸ் காட்சிகளில் நான் நடித்த போது படபடப்புடன் நின்றேன். அதைப்பார்த்த பார்த்திபன் சார், அதில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

SCROLL FOR NEXT