சினிமா

நிமிர் படத்தின் சென்சார் ரிசல்ட்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நிமிர்’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. #Nimir

மாலை மலர்

உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’. இதில் இவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்கள். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி உள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘யு’ வழங்கி சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் டி குருவில்லா தயாரித்துள்ளார். இப்படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில் 'நிமிர்' படம் உருவாகியுள்ளது.