சினிமா

அவர் எனக்கு நண்பர் மட்டும்தான் - நிகிஷா பட்டேல்

பாண்டி முனி படத்தில் பிசியாக நடித்து வரும் நிகிஷா பட்டேல், தன்னைப் பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து, அவர் எனக்கு நண்பர் மட்டும்தான் என்று கூறியிருக்கிறார். #NikeshaPatel

மாலை மலர்

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

தற்போது கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பாண்டி முனி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நிகிஷா படேல். இவர் பிரபுதேவாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இது திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை நிகிஷா பட்டேல் மறுத்துள்ளார். பிரபுதேவாவை நான் திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்படுவதாக வந்த செய்திகள் உண்மையில்லை. நான் யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. பிரபுதேவா எனக்கு நண்பர் மட்டும்தான். மற்றும் என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர். நான் அவரை சார் என்றுதான் கூறுவேன்’ என்று கூறியிருக்கிறார்.