நிஹரிகா 
சினிமா

நடிகை நிஹரிகாவின் திருமண தேதி அறிவிப்பு

தமிழில் விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிஹரிகாவின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள். நிஹரிகாவுக்கும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் வெங்கட சைதன்ய ஜோனாலகாடு என்பவருக்கும் திருமணம் முடிவானது. 

கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந்தேதி ஐதராபாத்தில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்துக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.