சினிமா

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 150-வது படம் குறித்த புதிய தகவல்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 150-வது படமான நிபுணன் குறித்த அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களுடன் வெளியாக உள்ள இப்படம் அர்ஜுனுக்கு 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

`நிபுணன்' என்பது படத்தின் கதாநாயகனான அர்ஜுனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில்,  அறிவாற்றலினாலும், கடும்  உழைப்பினாலும்  உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் `நிபுணன்'. இப்படத்தில் பிரசன்னா, வரலட்சுமி சரத் குமார், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி, அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை `நிபுணன்' படம்  பூர்த்தி செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் `நிபுணன்'. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவீனின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து பாஷன் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர்.