பாஸ்கர் ஒரு ராஸ்கல் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்து 2015-ல் வெளியாகி வசூல் குவித்த படத்தின் தழுவல். அரவிந்தசாமி, அமலாபால் ஜோடியாக நடித்துள்ளனர். சித்திக் டைரக்டு செய்துள்ளார்.
பக்கா படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாகவும், நிக்கி கல்ராணி, பிந்து மாதவி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.சூர்யா டைரக்டு செய்துள்ளார்.
தியா படம் சாய் பல்லவி-நாகசவுரியா ஜோடியாக நடிக்க விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ளது. இதில் சாய் பல்லவி ஒரு குழந்தைக்கு தாயாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே கரு என்று இதற்கு பெயர் வைத்து பின்னர் தியா என்று மாற்றி உள்ளனர்.
உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் அவெஞ்சர்ஸ்-3 ஹாலிவுட் படமும் தமிழ், ஆங்கில மொழிகளில் இந்த மாதம் திரைக்கு வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஜோடியாக நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ந் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து உள்ளார். கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படம் அதற்கு முன்பாகவே திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.