சினிமா

`மெர்சல்' படத்துடன் `நெஞ்சில் துணிவிருந்தால்' மோதவில்லை: இயக்குநர் சுசீந்திரன் விளக்கம்

`மெர்சல்' படத்துடன் `நெஞ்சில் துணிவிருந்தால்' படம் மோதவில்லை என்று இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்திருக்கிறார்.

‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழை பெற்ற இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

``இந்த அறிவிப்பை அடுத்து அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை மெர்சல் உடன் வருகிறோம். 2013-ல் `பாண்டியநாடு' திரைப்படம் அஜித் சாரின் `ஆரம்பம்' படத்துடன் வெளியிட்டோம்... ஆரம்பம் படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது... நன்றி"

என்று கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT