சினிமா

நவம்பரில் ரிலீசாகும் செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை'

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் உருவாகி பலமுறை தள்ளிப்போகி வரும் `நெஞ்சம் மறப்பதில்லை' படம் விரைவில் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுறது.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தொடர்ந்து தள்ளிப்போகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மனைவியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பேயாக நடித்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தை வருகிற நவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 3-ஆம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதே தேதியில் சுசீந்திரனின் `நெஞ்சில் துணிவிருந்தால்', சுசிகணேசனின் `திருட்டு பயலே 2' படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.