சினிமா

ஹீரோவாக அறிமுகமாகும் நஸ்ரியாவின் தம்பி

நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நஸ்ரியாவின் வீட்டில் இருந்து அவரது தம்பியும் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். #NazriyaNazim #NaveenNazim

`நேரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். தொடர்ந்து `ராஜா ராணி', `நையாண்டி', `வாயை மூடி பேசவும்', `திருமணம் எனும் நிக்காஹ்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 

இவ்வாறாக சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில், மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். 

அதே நேரத்தில் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இந்நிலையில், நஸ்ரியாவின் தம்பி நவீன் நாசிம் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `குப்பி' படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கிறார். ஜான்பால் அடுத்ததாக `அம்பிலி' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். 

இந்த படத்தில் சவுபின் சாஹர் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நவீன் நாசிமும், தன்வி ராமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை இ4 என்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. #NazriyaNazim #NaveenNazim

SCROLL FOR NEXT