நிவின் பாலி ஜோடியாக ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. அழகான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்திற்குப் பிறகு ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’, தனுஷுடன் ‘நையாண்டி’, துல்கர் சல்மானுடன் ‘வாயை மூடி பேசவும்’, ஜெய்யுடன் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில், மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பஹத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இணைந்து பிருத்வி ராஜ் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், கணவர் பஹத் பாசில் நடிக்கும் ‘அயுபிண்டே புத்தகம்’ படத்தைத் தயாரிக்கிறார் நஸ்ரியா. அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.