சினிமா

கமல்ஹாசனுடன் மோதும் நயன்தாரா

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருபட்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KolamaavuKokila #CoCo #Nayanthara

மாலை மலர்

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘கோலமாவு கோகிலா’ படம் ரிலீசாக இருக்கிறது. நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநாளில் தான் கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படமும் ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். #CoCo #KolamaavuKokila #Nayanthara