சினிமா

நயன்தாரா ரகசிய திருமணமா?

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

இந்த நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வலம் வருகின்றன. தெலுங்கு, மலையாள பட உலகிலும் இதுபற்றி பேசப்படுகிறது.

இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் சேர்ந்து வாழ்கிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த தினத்தை நயன்தாரா அமெரிக்காவுக்கு சென்று அவருடன் கொண்டாடினார். அந்த புகைப்படங்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருவரும் மகிழ்ந்தனர்.

கடந்த 2 வருடங்களாகவே இவர்களுடைய நெருக்கம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. என்றாலும், இதுபற்றி நயன்தாரா கண்டு கொள்வதே இல்லை. காதலிக்கவில்லை என்று இருவரும் மறுத்ததும் இல்லை. கல்யாண வதந்திகள் வந்தாலும், எதுவும் சொல்வதும் இல்லை.