சினிமா

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா

ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்க இருக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இவர் அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

நயன்தாரா நடிப்பில் தற்போது ‘அறம்’ படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.