சினிமா

அரசியலில் களமிறங்கும் நயன்தாரா?

அறம் படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாரா, இதன் வெற்றியை தொடர்ந்து அரசியலில் களமிறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அதிகாரிகள் தங்களுடைய பணிகளை செய்வதில், எப்படிப்பட்ட இன்னல்கள் வருகிறது என்பதை இயக்குனர் திரைக்கதையாக அமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதிலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த பாகத்தில் தீவிர அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.