இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா' என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசன் ஜோடியாக ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கவும் பேசி வருகிறார்கள். இன்னும் அந்த படத்தில் அவர் நடிப்பது உறுதியாகவில்லை. அறிவழகன் இயக்கும் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இன்னொரு தெலுங்கு பட வாய்ப்பும் வந்து இருக்கிறது. நயன்தாராவின் சம்பளமும் ரூ.3 கோடியை தாண்டி உள்ளது.