சினிமா

ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடியால், தனது சம்பள பணம் ரூ.50 லட்சத்தை நயன்தாரா படத்திற்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். #Nayanthara

நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. 

இமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல் எழுந்தது. ரிலீஸ் செய்வதற்கு நெருக்கடியான நிலைக்கு ஆளானார். அப்போது நயன்தாராவுக்கு 50 லட்சம் சம்பள பாக்கி இருந்து இருக்கிறது. 

நயன்தாரா நினைத்திருந்தால் அதை அப்போது கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளரின் நிலையை எண்ணி அந்த சம்பளத்தை கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம். இந்த செய்தி தமிழ் சினிமாவில் பரவ நயன்தாராவுக்கு பாராட்டு மழை குவிகிறது.