சினிமா

ஊட்டியில் நரகாசூரனின் வேலை ஆரம்பமானது

துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'நரகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியுள்ளது.

மாலை மலர்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படம் வெளியாகி திரையுலத்தினர் மற்றும் பொது மக்களிடையே அதிகம் பாராட்டைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ‘நரகாசூரன்’ படத்தின் வேலைகளை தொடங்கினார் கார்த்திக் நரேன்.

அதன்படி இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். முதல் கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.


'துருவங்கள் பதினாறு' போல இப்படத்தையும் பாடல்கள் ஏதுமின்றி உருவாக்க முடிவு செய்துள்ளார்கள். அடுத்தாண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.