சினிமா

நடிகையர் திலகம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாவித்ரியின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #NadigaiyarThilagam

மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகை நிருபராக நடிக்கிறார். 

சமீபத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரமும், படத்தில் அவர்களது தோற்றம் குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகியிருந்தது வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 14) வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

மிக்கி ஜே மேயர் இசையமைக்கும் இந்த படத்தில் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய, பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். 

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற மே 9-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #NadigaiyarThilagam #Mahanati