சினிமா

பூஜையுடன் துவங்கிய நாடோடிகள்-2

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் நட்பை மையப்படுத்தி உருவாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `நாடோடிகள்-2' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

கடந்த 2009-ல் வெளியாகிய படம் `நாடோடிகள்'. 

சமுத்திரக்கனி இயக்கியிருந்த இந்த படத்தில் சசிக்குமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நட்பை மையப்படுத்தி, நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிய இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதுல்யா ரவி, பரணி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

நாடோடிகள் பிலிம்ஸ் மற்றும் இன்ஸ்பைர் என்டர்டெயின்மென்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.