சினிமா

பாக்யராஜ் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய மிஷ்கின்

தனது இயக்கத்தில் சாந்தணுவை நடிக்க வைப்பதன் மூலம் பாக்யராஜ் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை இயக்குநர் மிஷ்கின் நிறைவேற்றியிருக்கிறார். #Mysskin #Shanthanu

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து மிஷ்கின் தயாரித்து நடித்த ‘சவரக்கத்தி’யும் நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், மிஷ்கினின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தணு நடிப்பதாகவும், ‘நானும் நந்தினியும்’, ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ ஆகிய படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் சாந்தணு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சாய் பல்லவியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ பட விழாவில் பேசிய மிஷ்கின், “சாந்தனுவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது. நிச்சயம் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்” என்று கூறி இருந்தார். தற்போது, அந்த வாக்குறுதியை மிஷ்கின் நிறைவேற்றி இருக்கிறார். #Mysskin #Shanthanu

SCROLL FOR NEXT