சினிமா

பாதிரியாராக மாறும் இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் `துப்பறிவாளன்' படம் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்க மிஷ்கின் அடுத்த படத்திற்காக பாதிரியாராக உருவெடுத்திருக்கிறார்.

மாலை மலர்

அதாவது இந்த படத்தில் பாதிரியாராக முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார். அதுமட்டுமின்றி தியாகராஜன் குமாரராஜா, நலன் குமாரசாமி, நீலன் சேகரை தவிர்த்து மிஷ்கினும் இப்படத்தின் ஒரு பகுதிக்கு இணை எழுத்தாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, நதியா, காயத்ரி, பகவதி பெருமாள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய விஜய் சேதுபதியின் ஷில்பா போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.