சினிமா

இணையத்தில் வைரலான மிஸ்டர்.லோக்கல் டிரைலர்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. #MrLocal #MrLocalTrailer

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஆக்‌ஷன், காமெடி கலந்த இந்த டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒரு சிங்கிள் பாடலை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara

SCROLL FOR NEXT