சினிமா

சிவகார்த்திகேயன் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #MrLocal #Nayanthara

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார். #MrLocal #Sivakarthikeyan #Nayanthara