ஏன் என்னை ஏதோ செய்தாய் பட காட்சி 
தரவரிசை

ஏன் என்னை ஏதோ செய்தாய்- திரை விமர்சனம்

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மது மற்றும் புகைப்பிடித்தல் என சலிப்பை ஏற்படுத்துகிறது.

சினிமா செய்திப்பிரிவு

நவீன இளைஞர்களின் தனிமை மற்றும் காதலால் ஏற்படும் மாற்றத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார்.

கதை

சிறுவயதிலேயே தாயை இழந்து, தந்தையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் ஆண்டனி தனிமையால் தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிறான். நண்பர்களுடன் கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழும் அவன், ஒரு நாள் எஸ்கார்ட் சேவையில் இருக்கும் மதுமிதாதாசை சந்திக்கிறார். ஆரம்பத்தில் சாதாரண சந்திப்பாகத் தொடங்கும் அவர்களது உறவு, மெல்ல காதலாக மாறுகிறது.

மதுமிதாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதை அறிந்தும் கார்த்திக் அவளை உண்மையாக நேசிக்கிறான். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்யும் நிலையில், கார்த்திக்கின் செயல்களால் அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இதனால் மீண்டும் மனம் உடைந்து காணப்படும் கார்த்தியின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதாநாயகனாக அறிமுகமாகும் டி.அந்தோணி, அன்பிற்காக ஏங்கும் இளைஞனின் மனநிலையை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக போதையில் தடுமாறும் மற்றும் காதலால் மனம் மாறும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மது மற்றும் புகைப்பிடித்தல் என சலிப்பை ஏற்படுத்துகிறது.

மதுமிதா தாஸ், சவாலான கதாபாத்திரத்தில் மென்மையும் பக்குவமும் கலந்த நடிப்பை வழங்கி கவர்கிறார். காதல் மற்றும் பிரிவு காட்சிகளில் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி, ஆலம் ஷா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

பியட்ரோ வில்லானியின் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரனின் பாடல்கள் காதல் உணர்வுகளுக்கு வலு சேர்க்க, ஜோயி ரெடாவின் பின்னணி இசை காட்சிகளின் உணர்ச்சித் தீவிரத்தை அதிகரிக்கிறது.

எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை கவனித்துள்ள டி.அந்தோணி, நவீன இளைஞர்களின் தனிமை மற்றும் காதலால் ஏற்படும் மாற்றத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT