தரவரிசை

Right

தொழில்நுட்பம் மூலம் மிரட்டும் மர்ம கும்பலை பிடிக்கும் காவல்துறையின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்பமாக உருவாகியுள்ளது.

Janarthanan

பாரத பிரதமர் சென்னைக்கு வருவதால் நகரமே பரபரப்பாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக இருக்கும் நட்டி, போலீஸ் படையுடன் பந்தபோஸ்துக்கு செல்கிறார்.

அந்த நேரத்தில், பாதுகாப்பை கருதி போலீசார் சில குற்றவாளிகளை சிறையில் அடைத்து வைக்கின்றனர். பிரதமர் வருகையால் நட்டி பிசியாக இருக்கும் நிலையில், அமைச்சரின் மகன் சிறையில் இருக்கும் குற்றவாளிகளை அழைத்து சென்றுவிடுகிறான்.

லேப்டாப் மெக்கானிக்காக இருக்கும் அருண் பாண்டியன், தனது மகன் இரவில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், போலீஸ் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில், காவல் நிலையத்தில் திருடன் ஒருவனை பிடித்த போலீஸ், அவனிடம் இருந்து சில பொருட்களை பறிமுதல் செய்து உரியவர்களிடம் கொடுக்கின்றனர். இதற்கிடையே, அந்த இடத்தில் மர்மமான முறையில் அதிநவீன லேப்டாப் ஒன்றும் தென்படுகிறது. அந்த லேப்டாப்பை தனது மகனுக்காக எடுத்துக் கொள்ள அங்கிருக்கும் போலீஸ் ஒருவர் முயற்சிக்கிறார். அப்போது, அந்த லேப்டாப்பை திறந்து ஆன் செய்து பார்க்கும்போது, தொழில்நுட்பம் மூலம் போலீஸ் ஸ்டேஷனையே ஹேக் செய்யப்படுகிறது.

பின்னர், அந்த லேப்டாப் மூலமாக பேசும் மர்ம நபர் ஒருவர், தான் பல்வேறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாகவும், போலீஸ் அமர்ந்திருக்கும் நாற்காலியின் கீழேயும் குண்டு இருப்பதாகவும், நான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும், இல்லை என்றால் ஒவ்வொரு குண்டுகளை வெடிக்க விடுவேன் என்றும் மிரட்டுகிறார்.

பிரதமர் வரும் நேரத்தில் காவல் நிலையத்திலேயே இப்படி ஒரு சூழல் என்றால் பிரச்சனை ஆகிவிடும் என்று இதனை ரகசியமாக கையாள போலீசார் முடிவு செய்கின்றனர்.

இறுதியில், மர்ம நபர் யார்? ஏன் குண்டு வைத்து மிரட்டுகிறான்? அமைச்சரின் மகன் ஏன் குற்றவாளிகளை அழைத்து செல்கிறார்? பிரதமர் வரும் நேரத்தில் ஏன் இப்படி நடக்கிறது? போலீஸ் அதிகாரி நட்டி இதை எப்படி கையாண்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

கதையின் நாயகன் என்ற அடையாளம் இருந்தாலும், நட்டி படம் முழுவதும் இடம்பெறவில்லை. படத்தின் இறுதிக்காட்சியின் போது திடீரென்று எண்ட்ரி கொடுத்து, அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து தன்னை நாயகனாக நிலைநிறுத்திக் கொள்கிறார். அருண் பாண்டியன், பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி உள்ளிட்டோர் அசத்தியிருக்கிறார்கள்.

இயக்கம்

எழுதி இயக்கியிருக்கும் சுப்பிரமணியன் ரமேஷ்குமார், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் பழிவாங்கும் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், ஆங்காங்கே படத்தில் லேக் இருக்கிறது. கதை ஓரளவுக்கு அடுத்தது என்ன என்று இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இசை

இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளில் மிக கச்சிதமாக பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

தயாரிப்பு

ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி- திருமால் லட்சுமணன் & டி. சியாமலா.

வீடியோக்கள்

ரைட்

SCROLL FOR NEXT