Khalifa - திரைவிமர்சனம் 
தரவரிசை

Khalifa - திரைவிமர்சனம்

ஸ்டைல், ஆக்ஷன், நட்சத்திர பட்டாளம் என பல் ஈர்ப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளன.

Maalaimalar

மலையாள இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள 'கலிபா' திரைப்படம் ஓணம் பண்டிகையை ஒட்டி இன்று மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் பிருத்விராஜ் 'மம்பரக்கல் அமீர் அலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரின் தாத்தாவாக சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் 'மம்பரக்கல் அகமது அலி' பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிருத்ராஜ்க்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, ஃபிசா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மோகினி, இந்திரன்ஸ், பாலிவுட் நட்சத்திரங்களான நீல் நிதின் முகேஷ் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

திரைக்கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். அவரே ஜினு இன்னோவேஷன்ஸ் பதாகையின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவாளராகவும் சாமன் சாக்கோ படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

கதை

ஒரு தங்கக் கடத்தல் கும்பலின் பின்னணியில் கதை நகர்கிறது.

பிருத்விராஜ் தனது குடும்ப தொழிலான தங்கக் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார். அவரது தாத்தா (மோகன்லால்) இதில் கில்லாடியாக இருந்துள்ளார்.

ஸ்டைல், ஆக்ஷன், நட்சத்திர பட்டாளம் என பல் ஈர்ப்பம்சங்கள் இப்படத்தில் உள்ளன.

படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதி, நாயகன் அமீர் அலியின் பின்னணி மற்றும் அவரைத் தங்கம் கடத்தலுக்குள் இழுக்கும் சூழ்நிலைகளை உருவாக்குவதில் கழிகிறது.

இரண்டாம் பாதியில், கலிபா படம் அமீர் அலிக்கும் அவரது எதிரிகளுக்கும் இடையிலான தங்கம் கடத்தல் போராக மாறுகிறது.

இதில் அவரது காதல் வாழ்க்கை மற்றும் குடும்பச் சூழல் ஆகிய அம்சங்களும் ஊடாடுகின்றன.

கேரளாவில் தங்கம் கடத்தலை சுற்றி நடக்கும் அரசியல் நகர்வுகளையும் படம் தொட்டுச் செல்ல முயல்கிறது.

தங்கம் கடத்தப்படும் முறைகளே படத்திற்கு அதிக சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

நடிப்பு மற்றும் இயக்கம்

கலிபாவின் மிகப்பெரிய பலம் பிருத்விராஜ் தான். கம்பீரமான தோற்றத்தாலும் ஸ்டைலாலும் அமீர் அலி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

சண்டைக் காட்சிகளிலும் அவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் பிரமிக்க வைத்துள்ளது.

சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக கோரியோகிராப் செய்யப்பட்டுள்ளன. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை அதற்கு வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்தின் தங்கக் கடத்தல் உலகின் பிரம்மாண்டத்தை தக்கவைக்கின்றன.

துணை கதாபாத்திரங்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள மோகினி குறிப்பிடத்தக்க நடிப்பை வழங்கியுள்ளார்.

படத்தில் மோகன்லால் என்ட்ரி தனி ரகம். அவர் வரும் போர்ஷனில் படத்தின் நாயகனாக பிருத்விராஜ் நிறுவிய ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

முதல் பாகம்

கலிபா தனி சினிமாட்டிக் வேர்ல்டு ஆக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலின் கீழேயே இது முதல் பாகம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதல் பாகம் அந்த உலகத்தையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் ஒரு தொடக்கமாகவே அமைந்துள்ளது.

முடிவு

அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கப் போதுமான விஷயங்கள் இதில் இருந்தாலும் முழுமையான திரை அனுபவத்தை முதல் பாகம் வழங்கத் தவறி உள்ளது.

படம் முடிந்து வெளியே வரும்போது நினைவில் நிற்கும் காட்சிகள் என்று பார்த்தால் மிகக் குறைவே.

பிருத்விராஜின் ஸ்டைலான நடிப்பு, சண்டைக் காட்சிகள் மற்றும் மோகன்லாலின் சிறப்புத் தோற்றம் ஆகிய தருணங்களில் பிரகாசிக்கும் படம் கதையம்சத்தில் சற்று சறுக்கியுள்ளது.

SCROLL FOR NEXT