கதைக்களம்
ஒரு பணக்கார வீட்டு பையன் விராட். கல்லூரியில் மாடர்ன் பொண்ணாக படித்து வருபவர் ஸ்ரீலீலா. ஒரு முறை ஸ்ரீலீலா கல்லூரி வகுப்பிலேயே தூங்கிவிட்டார். இதை பார்த்த கல்லூரி முதல்வர் ஸ்ரீலீலாவை திட்டி வெளியே அனுப்பி விடுகிறார். அவமானத்தில் வெளியே சென்ற ஸ்ரீலீலா அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வரின் பேனர் மீது கல் எடுத்து வீசுகிறார்.
அப்போது அந்த கல் அவ்வழியாக வந்த விராட்டின் சொகுசு கார் மீது விழுகிறது. இதில், விராட்டின் கார் விபத்துக்குள்ளாகி பலத்த சேதம் அடைகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விராட், ஸ்ரீலீலாவை பார்த்து கத்துகிறார். சேதத்திற்கான தொகையை கேட்கிறார். அவ்வளவு பணம் என்னிடமில்லை என கூறும் ஸ்ரீலீலா அங்கிருந்து லாவகமாக தப்பிவிடுகிறார். இதனால் மேலும் ஆத்திரடைந்த விராட், அங்கு ஸ்ரீலீலா பர்ஸ் விட்டுச் சென்றதை கவனிக்கிறார்.
அந்த பர்ஸில் இருக்கு தகவலை கொண்டு ஸ்ரீலீலாவை கண்டுபிடிக்கிறார். பணம் கேட்கிறார். ஸ்ரீலீலா இல்லை என்கிறார்.
அதனால், உன் கடன் தீரும் வரை எனக்கு அசிஸ்டெண்டாக இருக்கும்படி விராட் ஸ்ரீலீலாவிடம் அக்ரிமெண்ட் போடுகிறார். அதற்கு ஸ்ரீலீலாவும் சம்மதிக்கிறார்.
இந்த அக்ரீமெண்ட் கால கட்டத்தில் விராட் கூறும் வேலைகளை எல்லாம் ஸ்ரீலீலா செய்து வருவார். இப்படி போய் கொண்டிருக்கையில், அக்ரீமெண்ட் முடியும் நேரத்தில் ஸ்ரீலீலாவிற்கு விராட் மீது காதல் வருகிறது. ஆனால், அக்ரீமெண்ட் முடிந்துவிட்டதாக கூறி ஸ்ரீலீலாவை விராட் அனுப்பிவிடுகிறார். ஸ்ரீலீலா அழுது கொண்டே செல்கிறார்.
ஸ்ரீலீலா சென்றுவிட்ட பிறகு, தனிமையில் இருக்கும் விராட் ஸ்ரீலீலாவை மிஸ் செய்கிறார். அப்போது விராட்டுக்கு ஸ்ரீலீலா மீது காதல் ஏற்படுகிறது. ஆனால், ஸ்ரீலீலா காதலை ஏற்க மறுக்கிறார்.
இப்படியான சூழலில் ஸ்ரீலீலா காதலை ஏற்கிறாரா? இருவரின் காதல் பயணம் இறுதியில் என்ன ஆனது என்பது மீதி கதை.
நடிகர்கள்
கன்னட நடிகர் விராட் மற்றும் நடிகை ஸ்ரீலீலாவின் எதார்த்தமான நடிப்பு கவர்கிறது. இருவரின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
இயக்கம்
2019ம் ஆண்டில் கன்னடத்தில் வெளிவந்த ஐ லவ்யூ இடியட் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. கதையில் புதிதாக எதுவுமில்லை. படம் இழுவையாக செல்கிறது. கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் வி.ஹரிகிருஷ்ணாவின் இசை சுமார்.
ஒளிப்பதிவு
அர்ஜூனா ஷெட்டியின் ஒளிப்பதிவு பலம்.