தரவரிசை

எனிமி ஆப் தி ஸ்மக்ளர்- திரை விமர்சனம்

சரணின் நண்பராக வரும் பால சரவணன், படத்தின் விறுவிறுப்பான கடத்தல் சம்பவங்களுக்கு இடையே நகைச்சுவையால் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

சினிமா செய்திப்பிரிவு

கடத்தல் தொழிலின் பின்னணியில் காதல், குடும்பம், போலீசின் அதிரடி நடவடிக்கைகள் என பல பரிமாணங்களை காட்சிப்படுத்தும் கிரைம் திரில்லர். சரணின் மனப்போராட்டம், காவல்துறை அதிகாரியின் தீவிரம், மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரமான நடிப்பு படத்தை விறுவிறுப்பாக மாற்றுகிறது.

கதை

குடும்பச் சூழ்நிலை காரணமாகக் குறுகிய காலத்தில் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நண்பர்களான சரணும் பால சரவணனும், பிரபல கடத்தல் மன்னனான ஜே.டி. சக்கரவர்த்தியிடம் வேலைக்குச் செல்கின்றனர். ஆரம்பத்தில் பணத்துக்காகத் தொடங்கும் இந்தக் கடத்தல் தொழில், நாளடைவில் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஆபத்தான பாதையாக மாறுகிறது.

தான் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பது காதல் மனைவி ஷிமேகாவுக்குத் தெரியவர, வேறு வழியின்றித் தொழிலைக் கைவிட நினைக்கிறார் சரண். ஆனால், அந்த முடிவே அவருக்குப் புதிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதற்கிடையே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்கக் களமிறங்குகிறார் காவல்துறை அதிகாரி சமய முரளி. ஒருபுறம் கடத்தல் கும்பலின் ஆபத்துகள், மறுபுறம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனச் சரண் சிக்கித் தவிக்கிறார். இறுதியில் என்ன நடந்தது? ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதா? சரணின் காதல் வாழ்க்கை என்னவானது? கடத்தல் கும்பல் காவல்துறையிடம் சிக்கியதா? என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

குடும்ப வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பு, பணத்துக்காகத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு, காதல் மனைவிக்குத் தனது உண்மையான முகம் தெரிந்துவிட்டதே என்ற பதற்றம் என பல்வேறு உணர்வுகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் சரண் சிறப்பாக நடித்துள்ளார்.

சரணின் நண்பராக வரும் பால சரவணன், படத்தின் விறுவிறுப்பான கடத்தல் சம்பவங்களுக்கு இடையே நகைச்சுவையால் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காகத் திட்டமிட்டு வியூகம் அமைக்கும் காவல்துறை அதிகாரியாக சமய முரளி கவனம் ஈர்க்கிறார். குற்றவாளிகளை விசாரிக்கும் விதம், கம்பீரமான உடல்மொழி, விசாரணைக் காட்சிகளில் வெளிப்படுத்தும் தீவிரம் அவரது நிஜ முகத்தை வெளிப்படுத்துகிறது.

குறைவான காட்சிகளில் வந்தாலும், ராதிகா சரத்குமாரின் அனுபவம் மிக்க நடிப்பு படத்துக்குப் பக்கபலமாக அமைந்துள்ளது. கடத்தல் உலகின் பின்னணியில் இயங்கும் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜே.டி.சக்கரவர்த்தியும் லாலும் தங்களது அனுபவ நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.

இசை

காதல் கணவனுக்காகத் தனது குடும்பப் பின்னணியையும் பாதுகாப்பான வாழ்க்கையையும் விட்டுவிட்டு வரும் ஷிமேகா, கணவன் மீதான காதல் ஒருபுறம், அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தவறான பாதை மறுபுறம் என மனப்போராட்டத்துக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது.

விறுவிறுப்பான கடத்தல் சம்பவங்களுக்கு இடையே சினேகா குப்தாவின் நடனக்காட்சி ரசனையை ஏற்படுத்துகிறது. கடத்தல் நடவடிக்கைகளின் பின்னணியையும், துறைமுகத்தின் பரபரப்பான சூழலையும் காட்சிப்படுத்துவதில் ஒளிப்பதிவாளர் காவின் பாஸ்கரின் பங்களிப்பு சாம் டானியல் இசை சிறப்பாக அமைந்துள்ளது.

கடத்தல் தொழில்... காதல் மனைவி... ரூ.500 கோடி போதைப்பொருள்... அதிரடி போலீஸ் அதிகாரி! விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத கிரைம் திரில்லர்!

SCROLL FOR NEXT