வேலை செய்யாமல் வேலை பார்க்க நினைக்கும் 4 நண்பர்களின் கலாட்டாவையும், அவர்களைச் சுற்றி வரும் திரில்லரையும் கலந்து கொடுத்திருக்கும் கலகலப்பான ‘கோல்ட் கால்’.
வேலை தேடி அலையும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா, விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. ஆனால் வேலை கிடைத்த சந்தோஷத்தைவிட, வேலை செய்யாமல் எப்படி சமாளிப்பது? என்பதுதான் இவர்களின் ஒரே குறிக்கோள்!
ஒருகட்டத்தில் வேலை பறிபோகும் சூழல் உருவாக, அதே நேரத்தில் எதிர்பாராத கடத்தல் சம்பவமும் நால்வரையும் சிக்கலில் மாட்டிவிடுகிறது. அந்த சிக்கலில் இருந்து நால்வரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
திரில்லர் களத்தில் நகைச்சுவையையும் கலந்து சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை.
சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா, விஜய், பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, அமிதா ரங்கநாதா,கீர்த்தனா புல்கி ஆகியோரின் நடிப்பும் கூடுதல் பலம்.
பெங்களூருவை கதையின் பின்னணியாக கொண்டு, காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது சரவணனின் ஒளிப்பதிவு. பிரணவ் கிரிதரனின் இசையும் காட்சிகளுடன் கைகோர்த்து பயணிக்கிறது.
மொத்தத்தில், வேலை செய்யாமல் வேலை பார்க்க நினைக்கும் 4 நண்பர்களின் கலாட்டாவையும், அவர்களைச் சுற்றி வரும் திரில்லரையும் கலந்து கொடுத்திருக்கும் கலகலப்பான ‘கோல்ட் கால்’.