குறைந்த பட்ஜெட்டில் கதைக்கேற்ற வகையில் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் படத்தை நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். இன்னும் கொஞ்சம் கூடுதல் நகைச்சுவை திரைக்கதையில் சேர்த்திருந்தால் படம் மேலும் கலகலப்பாக இருந்திருக்கும்.
பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, டாக்டர் வின்சென்ட் அசோகனின் கடற்கரை பங்களாவுக்குள் திருடச் செல்லும் புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நால்வரும் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் தண்டனைக்கு பதிலாக அவர் முன்வைக்கும் உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் அவர்கள், பின்னர் டாக்டர் மற்றும் ரவி மரியாவின் உண்மை முகத்தை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா என்பதே கதை.
புகழ் தனது வழக்கமான பாணியில் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். அவருடன் கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ரவி மரியா தனது வழக்கமான நடிப்பில் கவனம் ஈர்க்க, சீரியஸான கதாபாத்திரத்தில் வின்சென்ட் அசோகன் சிறப்பாக நடித்துள்ளார்.
பிரக்யா நயனின் கிளாமர் பாடல் ரசிகர்களை கவர்கிறது. யு.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவும், சுபாஷ் முனிரத்னத்தின் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.