சினிமா

உதயநிதியை நிமிர வைத்த மோகன்லால்

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த இப்படத்திற்கு மலையாள நடிகர் மோகன்லால் படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார்.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிவுள்ளது. குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தை ஒரே கட்டமாக முடித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.

இப்படத்தில் உதயநிதியுடன் இயக்குனர் மகேந்திரன், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வருகிறார்கள்.