அதுமட்டுமல்லாமல் சசிகுமாரின் கொடிவீரன், பரத்தின் பொட்டு உள்ளிட்ட படங்களும் தீபாவளி அன்று ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படமும் தீபாவளி ரேசில் இணைந்திருக்கிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட போஸ்டரில் மெர்சலான காளை வருதுங்க! கூடவே... துள்ளி மானும் வருதுங்க! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் வைபவ் - ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ரத்ன குமார் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இசைமைத்துள்ளனர்.