“நான் காலையில் எழுந்த உடன் முதன்முதலில் தேடுவது எனது செல்போனைத்தான். சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்வதற்கும், சமூக பிரச்சினைகளை விமர்சனம் செய்து ‘மீம்ஸ்’ போடுவதற்கும் தனி திறமை வேண்டும். அவர்கள் அறிவாளிகள். கற்பனை திறன் அதிகம் உள்ளவர்கள் என்று கருதுகிறேன்.
ஒவ்வொரு முறையும் ரசிகர்களுடன் இணைய தளம் மூலம் உரையாடும் போது, விதம் விதமாக கேள்விகளை கேட்கிறார்கள். இதில் விஜய் அல்லது அஜித் இருவரில் யாரைப் பிடிக்கும் என்று ரசிகர்கள் கேட்கும் கேள்வி தான் மிகவும் கஷ்டமானது. அவர்களில் ஒருவரை தேர்ந்து எடுப்பது கடிமானது.